இந்தியா

கிணற்றில் குதித்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு: நடந்தது என்ன?

கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற போது கணவன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் குதித்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சமைக்காததால் கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த மனைவி வீட்டின் அருகே இருந்து கிணற்றில் குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் அதே கிணற்றில் குதித்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் குதித்ததைப் பார்த்து அவர்களை உடனே மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், அங்கு வந்த போலிஸார் அப்பகுதி மக்கள் உதவியுடன் கிணற்றில் குதித்த இருவரையும் மீட்க முயன்றனர். இதில் கிணற்றிலிருந்த குழாயைப் பிடித்துக் கொண்டதால் மனைவி உயிருடன் மீட்கப்பட்டார்.

ஆனால், மனைவியைக் காப்பாற்றுவதற்காகக் கிணற்றில் குதித்த அவரது கணவர் நீரில் மூழ்கியதால் அவரை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories