இந்தியா

80 வயதில் இரண்டாவது திருமணம்? - சொத்துக்காக தந்தை தலையை துண்டாக்கிய மகன் : பகீர் சம்பவம்.. பின்னணி என்ன?

மும்பையில் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 வயதில் இரண்டாவது திருமணம்? - சொத்துக்காக தந்தை தலையை துண்டாக்கிய மகன் : பகீர் சம்பவம்.. பின்னணி என்ன?
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கேட் ராஜ்குரு நகரைச் சேர்ந்தவர் சங்கர் போர்டே. 80 வயதாகும் சங்கர் போர்டே தனது மனைவியை இழந்த நிலையில், மகன் சேகர் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் மகனோ தந்தையை சரியாக கவணிக்காமல் இருந்துவந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் சங்கர் போர்டே இரண்டாவது திருமணம் செய்வது என முடிவெடுத்து, திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளார். மேலும் ஆன்லைன் செயலிகளிலும் இதற்காக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மகன் சேகருக்கு தெரியவந்ததும், இரண்டாவது திருமணம் செய்தால், தனக்கு வரவேண்டிய சொத்து முழுவதும் வராமல் போய்விடும் என்பதால் தந்தையைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

80 வயதில் இரண்டாவது திருமணம்? - சொத்துக்காக தந்தை தலையை துண்டாக்கிய மகன் : பகீர் சம்பவம்.. பின்னணி என்ன?

வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி, வீட்டில் இருந்த அரிவாளால் தனது சொந்த தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த முதியவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். ஆனால் ஆத்திரம் தனியாத நிலையில் இருந்த சேகர் கையில் இருந்த அறிவாளால் தந்தையின் தலையை துண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

பின்னர் காவல்நிலையத்திற்குச் சென்று தனது தந்தையை கொன்றுவிட்டதாக சேகர் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலிஸார் சேகர் வீட்டிற்குச் சென்று, முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories