இந்தியா

”ஃபாரினில் வேலை செய்வோரின் இளம் மனைவிகளே குறி” - பொறி வைத்து மோசடி - கேரளா கும்பல் சிக்கியது எப்படி?

வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் மனைவிகளை குறித்து வைத்து நகை பணங்களை ஆட்டையப்போடும் கும்பலை கேரள போலிஸார் கைது செய்துள்ளனர்.

”ஃபாரினில் வேலை செய்வோரின் இளம் மனைவிகளே குறி” - பொறி வைத்து மோசடி - கேரளா கும்பல் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அப்துல் சலாம் (32), அஷ்ரப் (36), வாடா நாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரஃபீக் (31). இந்த மூவர்தான் கைதாகியுள்ளனர்.

இவர்கள், அதேப்பகுதியில் குடியிருக்கும் வெளிநாட்டில் வேலைப்பார்ப்பவர்களின் இளம் மனைவிகளின் செல்ஃபோனுக்கு மிஸ்டு கால் கொடுத்து நட்புறவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அப்போது தங்களை மருத்துவர்கள் பட்டதாரிகள் என அறிமுகம் செய்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது நண்பர்களை உறவினர்கள் எனக் கூறி அந்த பெண்களிடம் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

”ஃபாரினில் வேலை செய்வோரின் இளம் மனைவிகளே குறி” - பொறி வைத்து மோசடி - கேரளா கும்பல் சிக்கியது எப்படி?

அப்போது கடனாக பணம் நகைகளை வாங்கிக் கொண்டு சில காலம் அமைதியாகி விடுவார்கள். அப்படியாக கொடுத்த பணம் நகையை திருப்பி கேட்கும் போது தங்களது ரகசியமாக பேசியவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டவும் செய்திருக்கிறார்கள்.

இதனால் பயந்துபோய் காசு போனால் போகட்டும் என பெண்களும் அமைதியாகிவிடுகிறார்களாம். இதனை சாதகமாகக் கொண்டு பல பெண்களிடம் மேற்குறிப்பிட்ட கும்பல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு இதே வித்தையை கையாள எத்தனித்தவர்கள் குறித்து சந்தேகித்து கையப்பமங்கலம் போலிஸிடம் பெண் ஒருவர் புகாரளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் அந்த மூவரையும் பிடித்து விசாரித்த போலிஸாருக்கு அவர்களின் மோசடிகள் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories