இந்தியா

”மனைவியுடனான கட்டாய பாலுறவுதான் இந்தியாவில் நடக்கும் கொடுமையான குற்றம்” - ஐகோர்ட்டில் டெல்லி அரசு வாதம்!

மனைவியாகவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி தாம்பத்யத்தில் ஈடுபடுவதும் பாலியல் அத்துமீறல்தான் என மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

”மனைவியுடனான கட்டாய பாலுறவுதான் இந்தியாவில் நடக்கும் கொடுமையான குற்றம்” - ஐகோர்ட்டில் டெல்லி அரசு வாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமண உறவே என்றாலும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடச் செய்வது குற்றச்செயலாக கருதப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக மகளிர் சங்கமும், ஒரு ஆண் மற்றும் பெண்ணும். வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நேற்று (ஜன.,7) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் சார்பில் வாதாடிய போது மனைவியாகவே இருந்தாலும் கட்டாயப்படுத்தி தாம்பத்யத்தில் ஈடுபடுவதும் பாலியல் அத்துமீறல்தான். திருமணம் என்ற பேரில் எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் நடைபெற்று வருகிறது.

அவற்றில் எத்தனை புகார்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டாயப்படுத்தி மனைவியை பாலியல் உறவில் ஈடுபடச் செய்வது கொடுமையான குற்றமாகும்.

திருமணம் ஆன பெண்ணும், ஆகாத பெண்ணும் ஒவ்வொரு சட்டத்திலும் வெவ்வேறாகவே கருதப்படுகின்றனர் என கூறியிருக்கிறார். இதனையடுத்து வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories