இந்தியா

BJP MLA-க்கு ‘பளார்’ என விழுந்த அடி.. உ.பி.யில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதியவர் துணிகரம் - என்ன காரணம்?

பா.ஜ.க எம்.எல்.ஏ தலையில் முதியவர் ஒருவர் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BJP MLA-க்கு ‘பளார்’ என விழுந்த அடி.. உ.பி.யில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதியவர் துணிகரம் - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உன்னாவ் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பங்கஜ் குப்தா கலந்து கொண்டு நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்தார்.

அப்போது முதியவர் ஒருவர் மேடையில் ஏறி, திடீரென பங்கஜ் குப்தாவின் தலையில் அடித்துள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத அவரது ஆதரவாளர்கள் உடனே முதியவரைத் தடுத்து மேடையிலிருந்து கீழே இறக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பா.ஜ.க எம்.எல்.ஏ மீது விழுந்த அடி அவர் மீது கோபத்தில் அல்ல, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான ஆட்சிக்கு விழுந்த அடி என விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து பங்கஜ் குப்தா கூறுகையில், "முதியவர் என் தந்தையைப் போன்றவர். அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories