இந்தியா

“கர்நாடகாவில் ஒரே நாளில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்” : ஆய்வு முடிவால் கடும் அதிர்ச்சி!

கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 1.3 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“கர்நாடகாவில் ஒரே நாளில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்” : ஆய்வு முடிவால் கடும் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரொனா வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு அம்மாநில அரசு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் இதுவரை 226 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், கர்நாடகா மூன்றாவது கொரோனா அலைக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தைச் சேர்ந்த சிவ ஆத்ரேயா மற்றும் இந்திய அறிவியல் நிறுவனத்தை (IISC) சேர்ந்த ராஜேஷ் சுந்தரேசன் ஆகிய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில், கொரோனா பரவல் என்பது நல்ல நிலையில் இருந்தால் பிப்ரவரி மாதத்தில் கர்நாடகாவில் தினசரி 40 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நிலைமை மோசமானால், கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 1.3 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் எனவும் அந்த ஆய்வு கணித்துள்ளது.

ஒரே நாளில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என வெளியாகியிருக்கும் இந்த ஆய்வறிக்கையால் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories