இந்தியா

தண்டவாளத்தில் படுத்த நபரை கனநேரத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்; திக் திக் நொடிகளின் வீடியோ!

தண்டவாளத்தில் படுத்துக்கிடந்த நபர் மீது ஏற்ற இருந்த ரயில் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் மும்பையில் நடைபெற்றிருக்கிறது.

தண்டவாளத்தில் படுத்த நபரை கனநேரத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்; திக் திக் நொடிகளின் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையின் ஷிவ்டி ரயில் நிலையத்தில் நடந்த எதிர்பாராத சம்பவத்தின் சிசிடிவி வீடியோதான் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று ரயில்வே போலிஸாரையும் ஊழியர்களையும் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.

இது தொடர்பான ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஷிவ்டி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிடப்பதை அறிந்த ரயில்வே ஊழியர் தக்க நேரத்தில் ரயிலில் உள்ள ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்தச் செய்திருக்கிறார்.

சில அடிகளுக்கு முன்பே ரயில் நிறுத்தப்பட்டதும் நிலையத்தில் இருந்த ரயில்வே போலிஸார் ஓடிச் சென்று தண்டவாளத்தில் படுத்திருந்த அந்த நபரை மீட்டிருக்கிறார்கள்.’ என பதிவிட்டதோடு உங்களின் உயிர் விலைமதிப்பற்றது. வீட்டில் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 50 நொடிகள் மட்டுமே இருக்கக் கூடிய அந்த காணொலியை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளதோடு ரயில்வே துறையினரின் துரிதச் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மீட்கப்பட்ட அந்த நபர் தற்கொலை செய்துக்கொள்ள வந்தவரா அல்லது குடிபோதையில் நிலை தெரியாமல் விழுந்துவிட்டாரா என இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

banner

Related Stories

Related Stories