இந்தியா

4 முறை தடுப்பூசி போட்டும் பாசிட்டிவ்; கடைசி நேரத்தில் சிக்கிய ம.பி. பெண் - இந்தூர் ஏர்போர்ட்டில் பரபரப்பு

துபாய் செல்ல இந்தூர் விமான நிலையத்துக்கு வந்த பெண்ணுக்கு அறிகுறியற்ற கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாசிடிவ் என வந்தால் மருத்துவமனைக்கும், நெகட்டிவ் என வந்தால் வீட்டுத் தனிமைக்கும் அனுப்பும் முறை நடைமுறையில் உள்ளது. இப்படி இருக்கையில், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் 18 அன்று மத்திய பிரதேசத்தின் மஹவ் நகருக்கு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வந்த 30 வயது பெண் ஒருவர் இன்று மீண்டும் துபாய்க்கு செல்ல இந்தூர் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்.

அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக அவரது துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள மூத்த மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி, துபாயில் இருந்து வந்த பெண் ஏற்கெனவே வெவ்வேறு நாடுகளில் சீனாவின் சினோபாம் மற்றும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி என 4 முறை தடுப்பூசி போட்டிருக்கிறார். அவருக்கு அறிகுறிகளற்ற கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories