இந்தியா

”ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது செருப்பை வீசிய பாலியல் குற்றவாளி” - சூரத் போக்ஸோ கோர்ட்டில் பரபரப்பு!

பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது குஜராத் மாநில போக்சோ நீதிமன்றம்.

”ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது செருப்பை வீசிய பாலியல் குற்றவாளி” - சூரத் போக்ஸோ கோர்ட்டில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி தனது செருப்பை எடுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான சுஜித் சாகெத் என்ற இளைஞர்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி புலம்பெயர் தொழிலாளியின் ஐந்து வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததோடு கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

இதனையடுத்து கைதான சுஜித் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சூரத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது 26 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் 53 ஆதாரங்களை கருத்தில்கொண்டு சுஜித் சாகெத்திற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி பி.எஸ்.கலா.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நீதிபதி மீது தன்னுடைய செருப்பை எடுத்து வீசியிருக்கிறார். ஆனால் நல்வாய்ப்பாக நீதிபதி மீது படாமல் பக்கவாட்டில் விழுந்திருக்கிறது. இந்த நிகழ்வு நீதிமன்றத்தை பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சுஜித்தை பிடித்து போலிஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

banner

Related Stories

Related Stories