இந்தியா

"அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் கிடைக்க வேண்டும்".. மோடி அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்!

அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் கிடைக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

"அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் கிடைக்க வேண்டும்".. மோடி அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகா பரவியதை அடுத்து பொதுமக்களுக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் இரண்டுதவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் போடலாமா என்பது குறித்து ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வந்தனர்.

தற்போது, உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முன்களப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக பூஸ்டர் கோடஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என இன்று நாட்டுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தியின் ட்விட்டரில், "பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பான தனது கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது சரியான நடவடிக்கை. பூஸ்டர் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories