இந்தியா

இந்தியாவில் முதல்முறை: 36 மணிநேரம்; 5 பணம் எண்ணும் மெஷின் - UP சென்ட் வியாபாரியால் ஆடிப்போன IT அதிகாரிகள்

சென்ட் வியாபாரி வீட்டில் 150 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்ட சம்பவம் வருமான வரித்துறை அதிகாரிகளையே விழிப்பிதுங்க வைத்திருக்கிறது.

இந்தியாவில் முதல்முறை: 36 மணிநேரம்; 5 பணம் எண்ணும் மெஷின் - UP சென்ட் வியாபாரியால் ஆடிப்போன IT அதிகாரிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கண்டிராத அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேச தொழிலதிபர் வீட்டில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக வந்த புகாரை அடுத்து உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த வாசனை திரவியம் தயாரிக்கும் வியாபாரியின் வீடு, குஜராத், மும்பையில் உள்ள குடோன்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

அதில் கான்பூர் அனந்த்புரியில் உள்ள அந்த வியாபாரி பியுஷ் ஜெயினின் பங்களாவில் நடத்தப்பட்ட சோதனையால் வருமான வரித்துறையினரே பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அது என்னவெனில், அங்குள்ள அறைக்குள்ள இருந்த இரும்பு பீரோவில் துணிகளை அடுக்கி வைப்பது போல கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பீரோ முழுவதும் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

அந்த ரூபாய் நோட்டுகளை முதலில் எண்ணுவதற்கு சிரமப்பட்ட அதிகாரிகள், எஸ்பிஐ உதவியுடன் வங்கியில் இருந்து 5 பணம் எண்ணும் மெஷினை வரவழைத்து பியுஷ் ஜெயினின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பணத்தை எண்ணியுள்ளனர்.

சுமார் 36 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையில் ரூபாய் நோட்டுகளாக மட்டுமே 150 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளை பெட்டிகளை வைத்து சீலிட்டு கண்டெய்னர்களில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர்.

இந்தியாவில் முதல்முறை: 36 மணிநேரம்; 5 பணம் எண்ணும் மெஷின் - UP சென்ட் வியாபாரியால் ஆடிப்போன IT அதிகாரிகள்

பிக் பஜார் என்ற பேரில் நடத்தப்பட்ட இந்த மெகா ரெய்டு குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபரான பியுஷ் ஜெயின் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது எனவும் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போலி நிறுவனங்கள் பெயரில் போலி பில்களை தயாரித்து கடன்களாகவும் வாங்கி குவித்துள்ள பியுஷ், அதனை வைத்து வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையும் செய்யப்பட்டுள்ளது எனவும் அது தொடர்பான ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories