இந்தியா

உணவு தேடி அலைந்து ஜன்னலை உடைத்து கிச்சனை துவம்சம் செய்த காட்டு யானை; பந்திப்பூரில் பரபரப்பு!

தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானை சமையலறையின் ஜன்னலை உடைத்து தலையை உள்ளே விட்டு துதிக்கையால் உணவுகளை எடுத்து உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உணவு தேடி அலைந்து ஜன்னலை உடைத்து கிச்சனை துவம்சம் செய்த காட்டு யானை; பந்திப்பூரில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தை ஒட்டி கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக சரணாலயம் உள்ளது. இந்த வனப் பகுதியிலிருந்து யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதி அருகே உள்ள குடியிருப்பிற்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பக சரணாலயம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானை விடுதியின் சமயலறை ஜன்னலை தந்தங்களால் உடைத்து தலையை ஜன்னல் வழியாக உள்ளே நுழைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து உணவை தேடி அங்குள்ள பொருட்களை சேதபடுத்தி உணவை துதிக்கையால் எடுத்து சாப்பிட, விடுதியில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியும் யானை அங்கிருந்து செல்லாமல் அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து சென்றது.

விடுதியில் இருந்தவர்கள் பயந்து உள்ளேயே பதுங்கி இருந்தனர். இந்த காட்சிகளை விடுதியில் இருந்தவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories