தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்குமார். இவரது மனைவி சுவாதி. இந்த தம்பதிக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருந்தன.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மென்பொறியாளராக இருந்த சுவாதிக்கு வேலை பறிபோனதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டு வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார்.
மேலும் இவரது கணவரும் கால் சென்டரில் வேலை செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து கணவன், வீட்டில் இல்லாதபோது சுவாதி தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இது பற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலிஸார் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பு சுவாதி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
அதில், கணவருக்குச் சரியான வேலை கிடைக்காததால் கடன் பிரச்சனை அதிகரித்தது. மேலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.