இந்தியா

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கொலை செய்த தாய்,சகோதரன்: செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய கொடூரம்!

காதல் திருமணம் செய்ததால் இளம்பெண்ணை தாய் மற்றும் சகோதரன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கொலை செய்த தாய்,சகோதரன்: செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், கயாகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த வினோஷ் சோர் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சொந்த கிராமத்திற்கே வந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.

இதனையறிந்த கீர்த்தியின் தாயார் அவரது வீட்டிற்கு வந்து மகளைப் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் கடந்த ஞாயிறன்று மீண்டும் தனது மகனுடன், மகளைப் பார்க்க வந்துள்ளார்.

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கொலை செய்த தாய்,சகோதரன்: செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய கொடூரம்!

அப்போது அம்மா மற்றும் சகோதரன் வந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த கீர்த்தி அவர்களுக்காக தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார். அங்கு வந்த தாயும், சகோதரனும் திடீரென கீர்த்தியின் தலையை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

பின்னர் வீட்டிலிருந்த அவரது கணவரையும் கொலை செய்ய முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பிறகு மகளின் இறந்த உடலுடன் செல்ஃபி எடுத்து அதை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து கீர்த்தியின் தாய் மற்றும் அவரது சகோதரன் தாமாகவே காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories