இந்தியா

இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை, நேபாளம்.. மோடி அரசால் இன்னும் என்னவெல்லாம் நாடு சந்திக்க போகிறதோ?

பொருளாதாரத்தில் கீழ்நோக்கிச் செல்லும் 18 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை, நேபாளம்.. மோடி அரசால் இன்னும் என்னவெல்லாம் நாடு சந்திக்க போகிறதோ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வூஹானில் இருந்து 2019ம் ஆண்டு முடிவில் உலக நாடுகளுக்கு கொரோனா பெருந்தொற்று நோய் பரவத் தொடங்கினாலும், விரைவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு பொருளாதார தரத்தை நிலை நிறுத்தியதோடு உலக வல்லரசு நாடாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

இந்த நிலையில், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை லோவி இன்ஸ்டியூட், ஆசியா பவர் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த தரவுகள் இந்தியாவுக்கு பேரதிர்ச்சியையே கொடுத்துள்ளது. ஏனெனில், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா நான்காவது இடத்தையே பிடித்துள்ளது. குறிப்பாக இலங்கை, நேபாளம் இந்தியாவை விட முன்னேறியிருக்கிறது

இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 2020ம் ஆண்டோடு ஒப்பிடுகளையில் இரண்டு புள்ளிகள் குறைந்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் கீழ்நோக்கிச் செல்லும் 18 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், பின்னடைவு மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகிய நான்கு நடவடிக்கைகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

அதன்படி பாதுகாப்பு கூட்டணியில் 7வது இடத்திலும், பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டணியில் 8வது இடத்திலும் இந்தியா இருப்பதால் இரண்டு பலவீனமான அதிகார நடவடிக்கைகளுக்காக எதிர் திசையில் பயணிக்கிறது என லோவி நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்கால வளங்களுக்கான அளவீட்டில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு இந்த பட்டியல் மிகப்பெரிய உதாரணமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories