இந்தியா

திறப்புவிழா அன்றே உடைந்து சிதறிய சாலை... MLA தேங்காய் உடைத்ததால் அம்பலமான பா.ஜ.க ஊழல்!

உ.பியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கும் விழாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ சாலையில் தேங்காயை உடைக்க, சாலை உடைந்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறப்புவிழா அன்றே உடைந்து சிதறிய சாலை... MLA தேங்காய் உடைத்ததால் அம்பலமான பா.ஜ.க ஊழல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அங்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதால் மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவர்வதற்காக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது போல நாடகமாடி வருகிறது அம்மாநில பா.ஜ.க அரசு.

இந்நிலையில், உ.பியின் பிஜ்நூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கும் விழாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ சாலையில் தேங்காயை உடைக்க, தேங்காய் உடையாமல் சாலை சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஜ்நூர் பகுதியில் ரூ. 1.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சாலை திறப்பு விழாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ சுசி சௌத்ரி சாலையில் போக்குவரத்தை துவக்கி வைத்த தேங்காயை அடித்து உடைத்தார்.

திறப்புவிழா அன்றே உடைந்து சிதறிய சாலை... MLA தேங்காய் உடைத்ததால் அம்பலமான பா.ஜ.க ஊழல்!

அப்போது தேங்காய் உடையாமல், புதிதாக அமைக்கப்பட்ட சாலை பெயர்ந்து சிதறியது. இச்சம்பவம் சாலையின் தரம் மோசமானதாக இருப்பதை அம்பலமாக்கியது.

அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் இச்சம்பவத்தால் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக சாலை அமைத்து கொள்ளையடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories