இந்தியா

WHATSAPP குழுவில் கசிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்: பா.ஜ.க ஆளும் உ.பி.யில் அலட்சியம்!

உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்ஆப்பில் வெளியானதை அடுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

WHATSAPP குழுவில் கசிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள்: பா.ஜ.க ஆளும் உ.பி.யில் அலட்சியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் UPTET எனப்படும் மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற முடியும்.

இந்நிலையில் இந்த வருடத்திற்காகத் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெற இருந்தது. இதற்காக 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து இன்று தேர்வு துவங்கும் நிலையில் மதுரா, காசியாபாத், புலந்த்ஷாஹர் ஆகிய பகுதிகளில் வாட்ஸ் ஆப் குழுவில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசித்துள்ளது.இதையடுத்து உனடியாக தேர்வு வாரியம் இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்ய அதிரடியாக உத்தரவிட்டது.

இது தொடர்பாக போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி 23 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் இருந்துள்ளது. இது எப்படி இவர்களுக்குக் கிடைத்தது என்பது குறித்தும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் அடுத்தமாதம் தேர்வு நடைபெற்றும் என்றும், விண்ணப்பித்தவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை' என கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories