இந்தியா

பிடிபட்ட பாம்பை வனத்தில் விடாமல் போதையில் கலாட்டா; கர்நாடகாவில் முதியவருக்கு நேர்ந்த கதி!

மதுபோதையில் பாம்பை பிடித்து எடுத்துச் செல்லும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்ட பாம்பை வனத்தில் விடாமல் போதையில் கலாட்டா; கர்நாடகாவில் முதியவருக்கு நேர்ந்த கதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவில் பாம்புகள் பிடிப்பதில் கைதேர்ந்தவரான ஒருவர் மதுபோதையில் பாம்பை பிடித்து எடுத்துச் செல்லும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் புஜாரி. பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள் பசவராஜ் புஜாரியிடம் தெரிவித்துள்ளனர். மது போதையில் இருந்த அவர் வழக்கம்போல லாவகமாக பாம்பை பிடித்தாலும் அதை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதில் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

பாம்பை பையில் அடைக்காமல் கையாலேயே அவர் தூக்கிச்சென்றபோது சுமார் 5 முறை பாம்பு அவரை கடித்ததாக தெரிகிறது. இதனால் விஷம் தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பாம்பை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டவாறே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories