இந்தியா

"பென்சில் திருடிட்டான் சார் - ஜெயில்ல போடுங்க இவன": போலிஸாரை அலறவிட்ட சிறுவன் - நடந்தது என்ன?

பென்சில் திருடியதாக காவல்நிலையத்தில் மூன்றாம் வகுப்பு மாணவன் புகார் கொடுத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

"பென்சில் திருடிட்டான் சார் - ஜெயில்ல போடுங்க இவன": போலிஸாரை அலறவிட்ட சிறுவன் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், பெத்தக்கபதூரில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஹனுமந்து. இச்சிறுவன் பக்கத்து வீட்டி பையனை காவல்நிலையம் அழைத்துச் சென்று , அடிக்கடி என் பென்சில் திருடுவதாக புகார் கூறினான். இதைக் கேட்டு காவல்நிலையத்தில் இருந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் போலிஸார் இருவரையும் அருகில் அழைத்து பேசினர். அப்போது ஹனுமந்து, 'இவன் என்னுடைய பென்சிலை அடிக்கடி திருடுகிறான் சார்.அந்த பென்சில் சிறிதாக ஆன பிறகு கொடுக்கிறான். இதனால் எனக்கு என்னபயன். எனவே இவன பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' என கூறினான்.

பின்னர் போலிஸார் அந்த சிறுவனிடம் இது குறித்து கேட்டனர். இதற்கு அச்சிறுவன், 'இல்லசார். நான் பென்சிலை எடுத்தாலும் இவனிடமே மீண்டும் கொடுத்துவிடுவேன்' என கூறினான். இதையடுத்து போலிஸார் இரண்டு சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கி, நண்பர்களாக கை குலுக்கவைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, சிறுவன் புகார் கூறிய, ஆந்திரா போலிஸார் தங்களது தங்களது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories