இந்தியா

இந்தியாவுக்கு வந்ததா ஓமைக்ரான் தொற்று? - பெங்களூருக்கு வந்த 2 தென்னாப்பிரிக்கர்களுக்கு கொரோனா பாதிப்பு!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூர் வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வந்ததா ஓமைக்ரான் தொற்று? - பெங்களூருக்கு வந்த 2 தென்னாப்பிரிக்கர்களுக்கு கொரோனா பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போதுதான் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், ஓமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த காரணம் இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களையும் எளிதில் தாக்கக்கூடிய ஆற்றல் படைத்தது என்பதுதான்.

ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான விமான சேவைகளை ரத்துசெய்துள்ளன.

இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் தொற்று கண்டறியப்படாத நிலையில் தற்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூர் வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுதான் இந்த அச்சத்திற்குக் காரணம்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்ட இருவர் பெங்களூரு வந்துள்ளனர். ஒருவர் நவம்பர் 9ஆம் தேதியும் மற்றொருவர் நவம்பர் 20ஆம் தேதியும் பெங்களூரு வந்தனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இவர்களுக்கு ஓமைக்ரான் உருமாறிய வைரஸ் பாதிப்பு இருக்குமா என்பதை அறிய மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories