இந்தியா

மகன் வந்ததை கவனிக்காமல் காரை இயக்கிய தந்தை; டயரில் சிக்கி பலியான 4 வயது குழந்தை - தெலங்கானாவில் துயரம்!

சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது தந்தையின் கார் ஏறியதில் மகன் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகன் வந்ததை கவனிக்காமல் காரை இயக்கிய தந்தை; டயரில் சிக்கி பலியான 4 வயது குழந்தை - தெலங்கானாவில் துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐதராபாத்தில் உள்ள எல்.பி.நகரின் மன்சூராபாத்தில்தான் நேற்று முன் தினம் (நவ.,21) இந்த சோகம் நடந்திருக்கிறது. லக்‌ஷ்மன் என்பவரின் 4 வயது மகன் சாத்விக் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கார் ஏற்றியதில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

காரை இயக்கியது சாத்விக்கின் தந்தை லக்‌ஷ்மன்தான் என்பது கூடுதல் தகவல். குடியிருப்பின் முன் நிறுத்தப்பட்டிருந்த தனது SUV காரை இயக்கத் தொடங்கிய போது சிறுவன் வந்ததை அறியாத அவர் குழந்தை மீது காரை ஏற்றியிருக்கிறார்.

இதனையறிந்த லக்‌ஷ்மன் காரை நிறுத்திவிட்டு சாத்விக்கை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார். பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து உடனடியாக அருகே இருக்கும் மருத்துவமனையில் சாத்விக்கை அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் சிறுவன் சாத்விக் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் லக்‌ஷ்மன் வீட்டின் முன் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. இதனை வைத்து எல்.பி.நகர் போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories