இந்தியா

ரூ.1.92 கோடி செல்லாத நோட்டுகளை வைத்து மோசடியில் ஈடுபட திட்டம்: முறியடித்த மங்களூர் போலிஸ்; நடந்தது என்ன?

1.92 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை மங்களூர் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ.1.92 கோடி செல்லாத நோட்டுகளை வைத்து மோசடியில் ஈடுபட திட்டம்: முறியடித்த மங்களூர் போலிஸ்; நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் மங்களூரில் நகரில் பர்கி போலிஸார் அதிகாலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை நடத்தினர். பின்னர் அதில் சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்களது பெயர் ஜுபேர், தீபக் குமார் மற்றும் அப்துல் நசீர் என தெரியவந்தது.

காரை சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக பழைய செல்லாத 1000 , 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ஒரு கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது சிவமொக்கா மற்றும் சித்ரதுர்கா பகுதியில் அரிசி மில் அதிபர்கள் இடமிருந்து பெற்று வந்ததாக தெரிவித்தனர்.

ரூ.1.92 கோடி செல்லாத நோட்டுகளை வைத்து மோசடியில் ஈடுபட திட்டம்: முறியடித்த மங்களூர் போலிஸ்; நடந்தது என்ன?

அதுமட்டுமில்லாது மங்களூருவில் இதனை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என பொது மக்களை நம்ப வைத்து மோசடி வேலையில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. தற்போது அவர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஒரு கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மதிப்பில்லாதது. இருப்பினும் இதை வைத்திருந்ததற்காக பிடிபட்ட தொகையை விட 5 மடங்கு அதாவது ரூபாய் 9.5 கோடி ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டியது இருக்கும் எனக் கூறிய மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories