இந்தியா

சென்னை மக்களே உஷார்... நாளை அதிகாலையில் கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மிக கனமழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை அதிகாலை சென்னை அருகே கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மக்களே உஷார்... நாளை அதிகாலையில் கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மிக கனமழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது. இது வலுவடைந்து நாளை தமிழக கடலோரப் பகுதியை நோக்கி வரக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப்பகுதியில் சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கோவாவுக்கு தெற்கே கிழக்கு மத்திய அரபிக்கடலில் உள்ளது. மகாராஷ்டிரா கடற்கரையொட்டி சுழற்சி 5.8 கிமீ வரை நீண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும். காரைக்கால் மற்றும் ராயலசீமா மற்றும் தென் ஆந்திரா கடலோரப் பகுதி, தென் கர்நாடக உட்பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கடலோர ஆந்திரா கடலோர பகுதிகளில் நாளை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும். ராயலசீமா மற்றும் கர்நாடகாவில் ஒருசில இடங்களில் கனமழை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசும் 45-55 கி.மீ வேகத்தில், சில சமயங்களில் 65 கி.மீ வரை பலத்த காற்று வீசும்.

சென்னை மக்களே உஷார்... நாளை அதிகாலையில் கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மிக கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு-மத்திய வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories