இந்தியா

வழுக்கை தலையை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை - நகை பறிப்பு: தெலங்கானாவில் அதிர்ச்சி !

இன்ஸ்ட்டாகிராம் மூலம் இளம் பெண்களை ஏமாற்றி பணம், நகைகளைப் பறித்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர்.

வழுக்கை தலையை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை - நகை பறிப்பு: தெலங்கானாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கே.பி.எஸ்.சி காலனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்ட்டாகிராம் மூலம் கார்த்திக் வர்மா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து இருவரும் நெருக்கமாகப் பழகிவந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு கார்த்திக் அந்த பெண்ணிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் வரை பணம் வாங்கியுள்ளார்.

பின்னர், கார்த்திக் மீது சந்தேகம் அடைந்த அந்தப் பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பெண்ணிடம் ஆந்திரா மாநிலம், ஹம்சவரம் கிராமத்தைச் சேர்ந்த சேக் முகமது ரபி என்ற இளைஞர்தான் Instagram பக்கத்தில் தனது பெயரி கார்த்திக் வர்மா என போலியா கணக்கைத் தொடங்கியுள்ளார்.

இந்த கணக்கிலிருந்து வசதி படைத்த இளம் பெண்களைக் குறிவைத்துத் தான் வெளிநாட்டில் வேலை பார்த்து இந்தியா திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அவருக்கு வழுக்கைத் தலை உள்ளது.

ஆனால், இதை விக்வைத்து மறைத்துக்கொண்டு செல்போன்களில் போட்டோடு எடுத்து அதை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்துள்ளார். இதைப்பார்த்து அவருடன் நெருங்கிய பெண்களைக் குறித்து பணம், நகைகளைப் பறித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து முகமது ரபி எந்த எந்த பெண்களிடம் நகை, பணம் பறித்து ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories