இந்தியா

மக்களே உஷார்.. தொலைந்த செல்போனால் ரூ.50 ஆயிரத்தை இழந்த இளைஞர் : அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

தொலைந்து போன செல்போனில் இருந்து ரூ.50 ஆயிரம் நூதனமாகத் திருடப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே உஷார்.. தொலைந்த செல்போனால் ரூ.50 ஆயிரத்தை இழந்த இளைஞர் : அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியைச் சேர்ந்தவர் சந்தீப் ஷர்மா. இவரது செல்போன் நவம்பர் 3ம் தேதி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் நவம்பர் 5ம் தேதி புதிய செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் சிம்கார்டை ஆக்டிவேட் செய்துள்ளார்.

அப்போது, அவரது PhonePe செயலியிலிருந்து ரூ.52,860 எடுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு இது குறித்து புராவரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து PhonePe செயலியிலிருந்த வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்து விசாரணை நடத்தினர். இதில் சஞ்சய் மற்றும் ராகுல்தாஸ் என்பவர்கள்தான் பணத்தை நூதனமா திருடியது தெரியவந்தது.

பின்னர் இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்களின் நூதன திருட்டி அம்பலமானது. சந்தீபின் காணாமல்போன செல்போனை ராகுலிடம் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த செல்போனை அன்லாக் செய்து, PhonePe செயலியை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் பாஸ்வேர்டுகளை தெரிந்து கொண்டு, அதிலிருந்து சஞ்சய்க்குப் பணம் அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தீப்பிடமிருந்து திருடிய பணத்தில் வாங்கிய 20,000 மதிப்புள்ள புதிய போன் ஒன்றை ராகுலிடமிருந்து பறிமுதல் போலிஸார் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories