இந்தியா

"விறகு அடுப்புக்கு மாறிவரும் மக்கள்".. மோடி அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு!

சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் விறகு அடுப்புக்கு மாறி வருவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

"விறகு அடுப்புக்கு மாறிவரும் மக்கள்".. மோடி அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.ஆட்சி அமைந்ததிலிருந்தே பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வலியுறுத்தி வந்தனர். ஆனால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை.

ஆனால், அண்மையில் நடைபெற்ற 13 மாநில இடைத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்த அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய பா.ஜ.க அரசு குறைத்துள்ளது. இருந்தபோதும் பெட்ரோல் 100 ரூபாய்க்கு அதிகமாகவே அனைத்து மாநிலங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் காஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது காஸ் சிலிண்டர் விலை ரூ.266 உயர்ந்து தற்போது ரூ.2000.50 ஆக விற்பனையாகிறது.

மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கிய இலவச கியாஸ் இணைப்பு, அடுப்பு, சிலிண்டர் ஆகியவற்றை விலை உயர்வால் மறுமுறை சிலிண்டர் வாங்க முடியாமல் ஏழைக் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். இதனால் மீண்டும் பழைய முறையான விறகு அடுப்புக்கு மாறிவருவதாக நாளேடுகளில் செய்தி வெளியானது.

இந்த செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் மோடி அரசைக் கண்டித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டரில்,"“வளர்ச்சி என்ற வார்த்தையிலிருந்து மத்திய அரசு வெகுதொலைவு விலகிச் சென்றுவிட்டது.

லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால், மீண்டும் விறகு அடுப்புக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர். மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது, பிரேக்கும் பிடிக்காமல் செயலிழந்துவிட்டது” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories