இந்தியா

‘என் பாக்கெட்டுனு நினைச்சு உங்க பாக்கெட்டுல’ - போலிஸுக்கு பளார் விட்டு ஜகா வாங்கிய பாஜக நிர்வாகி! Video

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. போலிஸ் கான்ஸ்டபிளை அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது

‘என் பாக்கெட்டுனு நினைச்சு உங்க பாக்கெட்டுல’ -  போலிஸுக்கு பளார் விட்டு ஜகா வாங்கிய பாஜக நிர்வாகி! Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூருவின் ராய்ச்சூரில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் நிர்வாகியுமான பாப்பா ரெட்டி தலைமைத் தாங்கினார்.

அப்போது சித்தராமையாவின் படத்தை பாஜகவினர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முற்பட்டனர். அதனை மஃப்டியில் இருந்த ராகவேந்திரா உள்ளிட்ட போலிஸார் தடுத்தனர். அதனைக் கண்ட பாப்பா ரெட்டி அந்த போலிஸின் கண்ணத்தில் அறைந்தார்.

இதனால் காவல்துறையினர் மத்தியில் பாப்பா ரெட்டி கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். மேலும் போலிஸை கண்ணத்தில் அறையும் நிகழ்வு வீடியோவாகவும் எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டது.

இதனையடுத்து பாஜக நிர்வாகியின் செயல் கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் ஆளானது. இதனால் பதறிப்போன பாப்பா ரெட்டி போலிஸாரை அறைந்தது தொடர்பாக மழுப்பலாக விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார்.

அதில், அந்த போலிஸார் சீருடையில் இல்லாததால் கட்சியைச் சேர்ந்தவர் என நினைத்து அறைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். கட்சித் தொண்டர்கள் என நினைத்து என்று அவர் கூறியிருப்பது தற்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories