இந்தியா

நாட்டின் அரிதான பொக்கிஷங்களும் தனியாருக்கு தாரைவார்ப்பு? அடுத்த டார்கெட்டை கையில் எடுத்த மோடி அரசு!

100 ஆண்டுகால முக்கிய வரலாற்று காட்சி மற்றும் ஒலி வடிவிலான பல்லாயிரம் ஆவணங்கள் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியிடம் பாதுகாப்பாக உள்ளன.

நாட்டின் அரிதான பொக்கிஷங்களும் தனியாருக்கு தாரைவார்ப்பு? அடுத்த டார்கெட்டை கையில் எடுத்த மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய சுதந்திர போராட்டங்கள், குடியரசுக்கு முந்தைய நாடாளுமன்ற விவாதங்கள் உள்ளிட்ட நாட்டின் மிகமுக்கிய ஆவணங்களை ஏலம் விட்டு வருவாய் ஈட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அரசு தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் முக்கிய ஆவணங்களை தனியாருக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும் என்று பிரச்சார் பார்தியின் தலைவர் சசிசேகர் கூறியுள்ளார்.

சுதந்தரத்துக்கு முன்பு தொடங்கி இந்தியாவின் 100 ஆண்டுகால முக்கிய வரலாற்று காட்சி மற்றும் ஒலி வடிவிலான பல்லாயிரம் ஆவணங்கள் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியிடம் பாதுகாப்பாக உள்ளன.

மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள், 1946 முதலான முக்கிய நாடாளுமன்ற நிகழ்வுகள் என்று பல முக்கிய ஆவணங்கள் பிரச்சார் பார்தியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்திய அரசின் கைசமுள்ள மிக அரிதான இந்த ஆடியோ, வீடியோ ஆவணங்களை இரண்டாகப் பிரித்து ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வகுக்கப்பட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை அறிவிப்பாணயாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள், ஓ.டி.டி நிறுவனங்கள் இவற்றை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரச்சார் பார்தியின் தலைவர் சசிசேகர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories