இந்தியா

'பாரத் மாதா கீ ஜே’ கோஷம் எழுப்பாததால் தாக்குதல் : ம.பி பள்ளிக்கூடங்களில் தலைதூக்கும் மதவெறி!

'பாரத் மாதா கீ ஜே' கோஷத்தை சொல்லாத பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாரத் மாதா கீ ஜே’ கோஷம் எழுப்பாததால் தாக்குதல் : ம.பி பள்ளிக்கூடங்களில் தலைதூக்கும் மதவெறி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், பரோட் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் தினந்தோறும் இறைவணக்கம் பாடப்படுவது வழக்கம். அப்போது, 'பாரத் மாதா கீ ஜே' என மாணவர்கள் கோஷத்தை சொல்லுவார்கள்.

இந்நிலையில் நேற்று இறைவணக்கத்தின் போது சில மாணவர்கள்'பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷத்தை சொல்லவில்லை. இதனால் பாரத் சிங்க ராஜ்புத் என்ற மாணவர் கோஷம் எழுப்பாத மாணவர்களை அடித்துள்ளார். பின்னர் பள்ளி முடிந்து பாரத் சிங்க ராஜ்புத் வீட்டிற்குச் செல்லும்போது அவரை வழிமறிந்து சில மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இவர்கள் மீது பாரத் சிங்க ராஜ்புத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தை அடுத்து நான்கு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் கல்வி நிலையத்தில் 'பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷத்தை கூறாத மாணவர்கள் மீது தாக்கிய பாரத் சிங்க ராஜ்புத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், கல்வி நிலையத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக நடந்து கொண்ட பாரத் சிங்க ராஜ்புத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் வன்முறைக்கு வித்திடும் இப்படியான கோஷங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories