இந்தியா

“சாம்பார் நல்லா இல்ல” : ஆத்திரத்தில் தாய், தங்கையை சுட்டுக்கொன்ற இளைஞர் - கர்நாடகாவில் ‘பகீர்’ சம்பவம்!

சாம்பார் சரியில்லை என்ற காரணத்தால் தாய் மற்றும் தங்கையை இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பார் நல்லா இல்ல” : ஆத்திரத்தில் தாய், தங்கையை சுட்டுக்கொன்ற இளைஞர் - கர்நாடகாவில் ‘பகீர்’ சம்பவம்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சாம்பார் சரியில்லை என்ற காரணத்தால் வீட்டில் தகராறு ஏற்பட்டு தாய் மற்றும் தங்கையை இளைஞர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்புரா அருகே குடகோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (24) நேற்று இரவு குடித்துவிட்டு வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளார்.

அப்போது சாம்பார் ருசியாக இல்லை என்ற காரணத்தால் தகராறு ஏற்பட்டதில், தாய் மற்றும் தங்கையை தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கி எடுத்து சுட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே தாய் பார்வதி (42) மற்றும் தங்கை ரம்யா (19) ஆகியோர் உயிரிழந்தனர். வெளியில் சென்றிருந்த தந்தை வீட்டுடு வந்து மனைவியும் மகளும் கொலையுண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், சித்தாப்புரா காவல் நிலைத்தில் தன் மகன் மீது புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், மஞ்சுநாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories