இந்தியா

"மன்னிப்பு கடிதம்"... காந்தி மீது பழிபோட்டு சாவர்க்கரை உத்தமராக்க நினைக்கும் ராஜ்நாத் சிங்!

மகாத்மா காந்திதான் சாவர்க்கரிடம் கருணை மனுவைத் தாக்கல் செய்யும் படி கூறினார் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்க பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மன்னிப்பு கடிதம்"... காந்தி மீது பழிபோட்டு சாவர்க்கரை உத்தமராக்க நினைக்கும் ராஜ்நாத் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.கவினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களுக்குப் பெயர்போனவர். 1911ஆம் ஆண்டு முதல் பல முறை ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார் சாவர்க்கர்.

“ஆங்கில அரசு விரும்பும் எதையும் செய்ய நான் தயார். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கு செல்வேன்” என சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு இப்படிப் பல முறை மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேயே அரசை எதிர்க்காமல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர்தான் சாவர்க்கர் என பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க, மகாத்மா காந்தி கருணை மனுத் தாக்கல் செய்யும் படி சாவார்க்கரிடம் கூறினார் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாவர்க்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "வீர சாவர்க்கர் இந்திய வரலாற்றின் ஒரு சின்னமாக இருந்தார். அவர் அப்படியே இருப்பார். அவரைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அவரை தாழ்ந்தவராகப் பார்ப்பது நியாயமானது அல்ல. அவர் ஒரு சுதந்திரப் போராளி மற்றும் தீவிர தேசியவாதி. ஆனால் மார்க்சிஸ்ட் மற்றும் செலனினிச சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் அவரை ஒரு பாசிஸ்ட் என குற்றம் சாட்டுகிறார்கள். சாவர்க்கர் மீதான வெறுப்பு நியாயமற்றது.

சாவர்க்கர் சிறையிலிருந்தபோது விடுவிக்கக் கோரி ஆங்கிலேயேரிடம் மன்னிப்பு கடிதம் எழுதியதாகத் தொடர்ந்து கூறிவருகிறார்கள். கருணை மனுக்களைத் தாக்கல் செய்யும்படி மகாத்மா காந்திதான் சாவர்க்கரிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.

தற்போது ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகாத்மா காந்தி உயிரோ இல்லாததால், அவர் வந்து உண்மையைச் சொல்லவா போகிறார் என்று இஷ்டத்திற்கு பேசுவதா?, சாவர்க்கரை நியாயப்படுத்தி மகாத்மா காந்தி மீது பழியைபோடுவதா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories