இந்தியா

வரதட்சணை கிடைக்காததால் ஆத்திரம்; பாம்பை வைத்து மனைவிக் கொலை - குற்றவாளியான கணவன்; திடுக்கிடும் தகவல்கள்!

சொத்துக்காக கட்டிய மனைவியை விஷப்பாம்புகளை ஏவிக்கொன்ற கணவன் குற்றவாளி என கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பு அக்டோபர் 13ம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை கிடைக்காததால் ஆத்திரம்; பாம்பை வைத்து மனைவிக் கொலை - குற்றவாளியான கணவன்; திடுக்கிடும் தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த உத்ராவுக்கும், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சூரஜ்ஜுக்கும் 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

திருமணத்தின் போது 100 சவரன் நகை, ரொக்கமாக ரூ.10 லட்சம், சொத்து, கார் என உத்ரா வீட்டினர் வரதட்சணையை வாரி வழங்கி இருக்கிறார்கள். இது போதவில்லை என கூடுதலாக வரதட்சணை பெற சூரஜும் அவரது குடும்பத்தினரும் முயன்றிருக்கிறார்கள்.

இதற்கு உத்ரா குடும்பத்தினரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் விஷம் நிறைந்த பாம்பை விட்டுக் கடிக்க வைத்து உத்ராவை சூரஜ் கொலை செய்திருக்கிறார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேரள போலிஸார் சூரஜ்ஜுக்கு எதிரான 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் முன் தாக்கல் செய்தது. விசாரணையின் போது மாதிரி உருவபொம்மை வைத்து பாம்பை விட்டு கடிக்க வைப்பது போன்ற அறிவியல் பூர்வமான சோதனைகளையும் காவல்துறை மேற்கொண்டிருக்கிறது.

அதில், உத்ராவை கடித்த பாம்பின் பற்களின் இடைவெளி அதிகமாக இருந்ததால் அவரது மரணத்தின் மீதான சந்தேகம் வலுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வழக்கமாக தூக்கத்தில் இருந்து தாமதமாக எழும் பழக்கம் கொண்ட சூரஜ் சம்பவம் நடந்த மே 7ம் தேதியன்று அதிகாலையிலேயே எழுந்து அறையை விட்டுச் சென்றதாலும், தாய் வீட்டின் முதல் மாடியில் ஏசி இருக்கும் போது ஜன்னல் வழியாகக் கூட பாம்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும் உத்ரா இருந்த அறைக்குள் பாம்பு வந்தது எப்படி என அவரது பெற்றோருக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நகர்ந்திருக்கிறது.

இதனால் தடயவியல், விலங்குகள் நல வாரியம், கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் என அனைவரது உதவியையும் நாடியிருக்கிறது காவல்துறை. இதற்கடுத்தபடியாக சூரஜ்ஜிடம் மேற்கொள்ளப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் உத்ராவை பாம்பை விட்டு கடிக்க வைத்தது குறித்து வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

வரதட்சணை கிடைக்காததால் ஆத்திரம்; பாம்பை வைத்து மனைவிக் கொலை - குற்றவாளியான கணவன்; திடுக்கிடும் தகவல்கள்!

முதலில் தூக்க மாத்திரை கொடுத்து உத்ராவை கண்ணாடி விரியன் பாம்பை விட்டு கடிக்க வைத்தபோது பிழைத்துக் கொண்டதால் 2 மாதம் கழித்து கருநாகத்தை வைத்து கடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்காக அந்த பாம்பை ஏழு நாட்களுக்கு பட்டினி போட்டு உத்ராவை கடிக்க வைத்திருக்கிறார்.

மேலும், உத்ராவை கொல்வதற்காக ரூ.10 ஆயிரம் கொடுத்து இந்த பாம்புகளை சூரஜ் வாங்கியிருக்கிறாராம். ஆனால் அந்த பாம்பு எதற்காக வாங்கப்பட்டது என்ற விவரம் தனக்கு தெரியாது என விற்பனை செய்தவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அனைத்து தரப்பு சாட்சியங்கள், ஆதாரங்களை விசாரித்த பிறகு சூரஜ்ஜை குற்றவாளி என அறிவிப்பதாக கொல்லம் மாவட்ட கூடுதம் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூரஜ்ஜுக்கான தண்டனை விவரங்கள் நாளை மறுநாள் (அக்.,10) அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories