இந்தியா

“இந்தியப் பெண்கள் வாடகைத் தாய் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை!

நவீன காலத்து இந்தியப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சை எழுப்பியுள்ளது.

“இந்தியப் பெண்கள் வாடகைத் தாய் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் சார்பில் உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் சுதாகர் பேசுகையில், “நமது நாட்டில் உள்ள பல நவீன பெண்கள் தனிமையில் இருக்கவே விரும்புகிறார்கள். இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதில்லை.

மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். இந்தியாவில் மேற்கத்தியக் கலாச்சாரம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இது நல்லதல்ல. இதைச் சொல்வதற்கு நான் வருந்துகிறேன்.

பெற்றோர்கள் நம்முடன் வாழ்வதை நாம் விரும்பவில்லை. அதேபோல் தாத்தா, பாட்டி என்பவர்கள் நம்முடன் இருப்பதையே நாம் மறந்து விட்டோம். இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு ஒருவிதமான மனநலப் பிரச்சனை இருக்கிறது. மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை நாம் உலகிற்கு கற்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பேசியதற்குப் பெண்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories