இந்தியா

“மகாராஷ்டிரா உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி” : பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டிய சிவசேனா கூட்டணி!

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளது.

“மகாராஷ்டிரா உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வி” : பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டிய சிவசேனா கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை உள்ளடக்கிய ‘ மகா விகாஸ் அகாதி’ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைப் பறிகொடுத்து பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் துலே, நந்துர்பார், அகோலா, வாசிம், நாக்பூர், பால்கர் ஆகிய 6 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 85 வார்டுகளுக்கும், 37 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 144 வார்டுகளுக்கும் அண்மையில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

85 மாவட்ட ஊராட்சிகளில் அதிகபட்சமாக பா.ஜ.க 22 இடங்களில் வெற்றிபெற்றாலும், ஒட்டுமொத்தமாக 46 இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ் 19 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 15 இடங்களிலும் சிவசேனா 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்ற கட்சிகள் 12 இடங்களிலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 144 வார்டுகளில் காங்கிரஸ் 36 இடங்கள், சிவசேனா 23 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 18 இடங்கள் என ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டணி 77 இடங்களை கைப்பற்றிய நிலையில், பா.ஜ.க 33 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

சுயேச்சைகள் 7 வார்டுகளையும், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேவா ஒரு இடத்திலும், ஏனைய கட்சிகள் 26 வார்டுகளிலும் பெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சிகளில் மகா விகாஸ் அகாதி கூட்டணி முன்பு 37 இடங்களை வென்றிருந்தது. தற்போது 46 இடங்களாக அது அதிகரித்துள்ளது. 31 வார்டுகளை வென்றிருந்த பா.ஜ.க தற்போது 22 வார்டுகளையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories