இந்தியா

அமைச்சரின் காரை நிறுத்தி அபராதம் விதித்த போக்குவரத்து போலிஸார்... தெலங்கானாவில் நடந்தது என்ன?

தெலங்கானாவில் சாலை விதிகளை மீறிய மாநில அமைச்சருக்கு போக்குவரத்து போலிஸார் அபராதம் விதித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் காரை நிறுத்தி அபராதம் விதித்த போக்குவரத்து போலிஸார்... தெலங்கானாவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலத்தின் தொழில்நுட்பத்துறை அமைச்சராக கே.டி.ராமாராவ் உள்ளார். இவர் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி பாபுகாட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் சென்றிருந்தார்.

அப்போது அமைச்சரின் கார் தவறான வழியில் வருவதையறிந்து அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் இளையா மற்றும் வெங்கடேஸ்வர்லு ஆகியோர் அமைச்சரின் காரை நிறுத்தினர். மேலும் அமைச்சரின் கார் என்றும் பாராமல் போக்குவரத்து விதிகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதித்தனர்.

பின்னர் போக்குவரத்து போலிஸார் அமைச்சரின் காரை சரியான பாதையில் செல்ல வழிவகை செய்து கொடுத்தனர். இருந்தபோதும் போலிஸார் விதித்த அபராத கட்டணத்தை அமைச்சர் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து அமைச்சரின் வாகனம் என்று தெரிந்தும் தங்கள் பணியில் நேர்மையாக இருந்து போக்குவரத்து காவலர்களுக்கு சால்வை அனித்து அமைச்சர் கே.டி.ராமாராவ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories