இந்தியா

பதஞ்சலி குருகுலத்தில் இளம் பெண் தற்கொலை... போலிஸில் சிக்கிய 7 பக்க கடிதம் : என்ன நடந்தது ?

உத்தரகாண்டில் உள்ள பதஞ்சலி குருகுலத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதஞ்சலி குருகுலத்தில் இளம் பெண் தற்கொலை... போலிஸில் சிக்கிய 7 பக்க கடிதம் : என்ன நடந்தது ?
madhur kukreti
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்திற்குட்பட்ட பகதராபாத் பகுதியில் பதஞ்சலி குருகுலம் செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வித்யா என்ற இளம் பெண் ஆறு ஆண்டுகளாக இங்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை இவர் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலிஸார் குருகுலத்தில் அவர் தங்கியிருந்த அரையில் சோதனை செய்தனர். அப்போது அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய ஏழு பக்கம் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

இதில் ஒரு நபரைப் பற்றியே அதிகம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரின் பெயரைக் கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை. மேலும் தற்கொலைக்கு காரணம் குறித்து அவர் குறிப்பிடவில்லை என போலிஸார் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories