இந்தியா

“பாலியல் வன்கொடுமை செய்து கருவைக் கலைக்க முயன்ற போது இளம் பெண் பலி” : உத்தர பிரதேசத்தில் கொடூர சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கருவைக் கலைக்க முயற்சி செய்த போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பாலியல் வன்கொடுமை செய்து கருவைக் கலைக்க முயன்ற போது இளம் பெண் பலி” : உத்தர பிரதேசத்தில் கொடூர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா என்ற கிராமத்தில் இளம் பெண் ஒருவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஷைலேந்தர் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனால் அந்தப் பெண் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

அப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டுப் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அந்த பெண் நடந்த வற்றைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சம்பவம் குறித்துப் பெற்றோர் போலிஸாருக்கு தெரியப்படுத்தவில்லை. பின்னர் அந்த பெண்ணுக்குக் கருவைக் கலைப்பதற்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சையின் போது அந்த பெண் பரிதாமாக உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் பாலியல் வன்கொடுமை செய்த ஷைலேந்திர சிங்கும் மற்றும் மருத்துவர் உட்பட நான்கு பேரை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories