இந்தியா

“இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி”: தாயின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்?

கேரளாவில் இரட்டைக் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி”: தாயின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாதாபுறத்தைச் சேர்ந்தவர் ராஃபிக். இவரது மனைவி சுபீனா. இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் இரட்டை குழந்தைகள் இருந்தன. இந்நிலையில், சுபீனா திடீரென தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் வீசியுள்ளார்.

பிறகு உறவினர்களுக்கு போன் செய்து நான் குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டதாகவும், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சுபீனா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பிறகு அவரை தீயணைப்புத்துறை உதவியுடன் மீட்டனர். ஆனால் ,அவரின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்த தாய் சுபீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் ஏன் அவர் குழந்தைகளைக் கிணற்றில் வீசினார் என்பது குறித்து அவரது கணவரிடமும், உறவினர்களிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories