இந்தியா

“சிறுத்தையிடம் இருந்து குழந்தையை போராடி மீட்ட இளைஞர்” : மும்பை ஆரோ வனப்பகுதியில் நடந்த ‘திகில்’ சம்பவம்!

மும்பையில் சிறுத்தையிடம் இருந்து சிறுவனை மீட்ட வாலிபருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

“சிறுத்தையிடம் இருந்து குழந்தையை போராடி மீட்ட இளைஞர்” : மும்பை ஆரோ வனப்பகுதியில் நடந்த ‘திகில்’ சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகாவ் அருகே ஆரே காலனி அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்நிலையில், ஆரோகாலனி பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரென அங்கு வந்த சிறுத்தை ஒன்று கவ்விக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் மாமா வினோத்குமார் உடனே தாமதிக்காமல் சிறுத்தையைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பிறகு தம்மை யாரோ தாக்க வருவதாக நினைத்து சிறுவனைப் புதருக்குள் போட்டுவிட்டு சிறுத்தை தப்பிச் சென்றுவிட்டது. உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்குச் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் சிறுவனுக்குக் கட்டுப்போடப்பட்டுள்ளது.

“சிறுத்தையிடம் இருந்து குழந்தையை போராடி மீட்ட இளைஞர்” : மும்பை ஆரோ வனப்பகுதியில் நடந்த ‘திகில்’ சம்பவம்!

இது குறித்து வினோத் குமார் கூறுகையில், சிறுவனைச் சிறுத்தை தூக்கிச் ஓடியபோது நானும் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது சற்று தூரத்திற்குச் சென்ற சிறுத்தை சிறுவனைப் போட்டு விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தது.

உடனே நான் சிறுவன் மீது படுத்துக் கொண்டேன். இதைச் சிறுத்தை கவனித்துக் கொண்டிருந்தது. இதனால் என்னையும் தாக்கிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. பிறகு சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது. பிறகு நான் சிறுவன் ஆயுஷை மருத்துவமனையில் சேர்த்தேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories