இந்தியா

HAL-ஐ டீலில் விட்டு தனியாருக்கு ரூ.20,000 கோடியை தாரைவார்த்த பாஜக அரசு : ரஃபேலை தொடர்ந்த அடுத்த முறைகேடு?

இதுவரை எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்துதான் ஒன்றிய அரசும், இந்திய ராணுவமும் விமானங்களை வாங்கி வந்தன. ஆனால், நரேந்திரமோடி அரசு ஆட்சிக்கு வந்தபின், எச்.ஏ.எல். கழற்றி விடப்பட்டுள்ளது.

HAL-ஐ டீலில் விட்டு தனியாருக்கு ரூ.20,000 கோடியை தாரைவார்த்த பாஜக அரசு : ரஃபேலை தொடர்ந்த அடுத்த முறைகேடு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்பெயின் நாட்டின் ‘ஏர்பஸ் டிபன்ஸ்’ நிறுவனத்திடமிருந்து ரூ.20 ஆயிரம் கோடிக்கு ராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கான மிகப்பெரிய காண்ட்ராக்டில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்திய விமானப்படையில் உள்ள ‘அவ்ரோ-748’ விமானங்களுக்கு மாற்றாக ‘சி-295’ என்ற 56 மீடியம் ரக போக்குவரத்து விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.

‘ஏர்பஸ் டிபன்ஸ்’ நிறுவனத்திடமிருந்து, அடுத்த 48 மாதங்களில் முதற்கட்டமாக 16 விமானங்களை பறக்கும் நிலையில் பெறும் இந்தியா, எஞ்சிய 40 விமானங்களை உள் நாட்டிலேயே தயாரித்துக்கொள்ள உள்ளது. இதற்கான துணை நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்டை (TASL) தேர்வு செய்துள்ளது. இதையொட்டி, ‘ஏர்பஸ் டிபன்ஸ், ஸ்பேஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL)’ தங்களுக்குள் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

HAL-ஐ டீலில் விட்டு தனியாருக்கு ரூ.20,000 கோடியை தாரைவார்த்த பாஜக அரசு : ரஃபேலை தொடர்ந்த அடுத்த முறைகேடு?

வழக்கமாக அரசுப் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் லிமிடெட் (HAL) நிறுவனத்திற்கே இதுபோன்ற ஒப்பந்தங்கள் வழங்கப்படும். இதுவரை எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்துதான் ஒன்றிய அரசும், இந்திய ராணுவமும் விமானங்களை வாங்கி வந்தன. ஆனால், நரேந்திரமோடி அரசு ஆட்சிக்கு வந்தபின், எச்.ஏ.எல். கழற்றி விடப்பட்டு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்பு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் போது, அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ துணை நிறுவனமாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தற்போது ஸ்பெயின் நாட்டு நிறுவனத்துடனான ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ‘டாடா’ நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. இதையே, தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் முதன் முறையாக ராணுவ விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று மோடி அரசு ஜம்பம் அடித்துள்ளது. இதன் மூலம் புதிதாக சுமார் 7 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

ஏர்பஸ், டாடா ஒப்பந்தத்தின் மூலம் விமானத் தயாரிப்பு பணிகள் மட்டுமின்றி பராமரிப்பு மற்றும் இதர சேவைகளையும் இந்த நிறுவனங்களே அடுத்த 30 ஆண்டுகளுக்கு வழங்க உள்ளன. இதனை வரவேற்றுப் பாராட்டியுள்ள ரத்தன் டாடா, இதனால் விமான தயாரிப்பு துறையில் இந்தியா புதிய இலக்குகளை எட்ட வழி ஏற்படும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories