இந்தியா

”இதை செய்தால்தான் மாநிலங்களின் வருமானம் உயரும்” - ஒன்றிய பாஜக அரசுக்கு பொருளாதார நிபுணர்களின் அறிவுரை!

மாநில வரி வருமானங்களில் கைவைக்கும் போக்கினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

”இதை செய்தால்தான் மாநிலங்களின் வருமானம் உயரும்” - ஒன்றிய பாஜக அரசுக்கு பொருளாதார நிபுணர்களின் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கானதா? நாளும் பொழுதும் வளம் கொழிக்கும் முதலாளிக்கானதா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. ஆம் அப்படி தான் உள்ளது ஒன்றிய அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் துவங்கி இன்னும் ஏராளம் உள்ளது. அதில் முக்கியமாக மாநில உரிமைகளை பறிப்பது, அவர்களின் வரி வருவாயை குறைப்பது. மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அடிப்படை தேவைகளுக்கான அனைத்து பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டுக்கும் 2021ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2001 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலராக இருந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலராக விற்பனை செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நேர்முக வரி 55 பைசாவாகவும், மறைமுக வரி 45 பைசாவாகவும் இருந்தது.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக நேர்முக வரியை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குறைந்து கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல் வரி 10 ஆகவும், டீசல் வரி 5 ரூபாயும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி 32 ஆகவும், டீசல் வரி 31 ஆகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு சொல்லவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பில் கொடுப்பட்டதை ஒன்றிய அரசு சுட்டி காட்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரி வரம்பு குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாய் ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும் என பொருளாதார நிபுணர் நாகப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல, பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசியபோது மாநில வரி வருமானங்களில் ஒன்றிய அரசு கை வைக்கிறது. செஸ் என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்கு போடப்படுவது. அதை ஒன்றிய அரசுதான் முடிவெடுக்கும். வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், புகையிலை பொருட்கள் உள்ளன.

மாநில வருமான வாய்ப்புகளை உருவாக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும். 36% -22% கார்ப்ரேட் வரி வருமானத்தை குறைத்துள்ளது. சாதாரண மக்களின் மறைமுக வரியை அதிகரித்து பெரும் முதலாளிகளின் நேரடி வரியை குறைக்கிறது. இது தவறான கொள்கை என்றார். பெரு முதலாளிக்களுக்கான அரசாக அல்லாமல் பெரும்பான்மை ஏழைகளுக்கான அரசாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

banner

Related Stories

Related Stories