இந்தியா

உ.பியில் வன்முறையே நடக்கலையா? அப்போ இதுலாம் என்னவாம்.. யோகி அரசை சரமாரியாக தாக்கிய நெட்டிசன்கள்!

பாஜக ஆட்சியின் போது வன்முறைகளே நடக்கவில்லை என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் வன்முறையே நடக்கலையா? அப்போ இதுலாம் என்னவாம்.. யோகி அரசை சரமாரியாக தாக்கிய நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே நாட்டில் பெண்கள், சிறுபான்மையினர் என பல தரப்பினருக்கும் எதிரான தாக்குதல்கள் ஏழு ஆண்டுகள் ஆகியும் ஓய்ந்த பாடில்லை.

அதில் உத்தர பிரதேசத்தில் மட்டுமே கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏராளமான வன்கொடுமை நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. இன்னமும் நடந்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் என பல தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாட்டிலேயே பாதுகாப்பில்லாத மாநிலமாகவே பாஜக ஆளும் உத்தர பிரதேசம் உருவெடுத்துள்ளது. இப்படி இருக்கையில், தனது தலைமையிலான ஆட்சியின் போது எந்த மதக்கலவரமும் நடக்கவில்லை என உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

2022ம் ஆண்டோடு உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்துள்ளார் யோகி ஆதித்யநாத். அப்போது, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு அவர்களின் சொத்துகளும் கைப்பற்றப்பட்டு வருகிறது.

பெண்களின் பாதுகாப்புக்காக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ரோமியோ எதிர்ப்பு படை, பிங்க் பூத்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் ஆட்சியின் போது 4.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என பேசியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சு உ.பி. மாநில மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலுன் அன்றாடம் வன்முறைக்கென பிரபலமடைந்த மாநிலம் என்றால் உத்தர பிரதேசம்தான் என்றளவுக்கான பெயரை பாஜக அரசு ஏற்படுத்திவிட்டு இப்படி தேர்தல் வரும் நேரத்தில் வாய்ப்பந்தல் இடுவதெல்லாம் வாக்கு வங்கியை குறிவைக்கும் செயல் என எதிர்க்கட்சிகளும், அரசியல் நோக்கர்களும் சாடியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories