இந்தியா

“தடுப்பூசி என்பது பிறந்தநாளில் கேக் வெட்டுவது போன்றதல்ல” : தடுப்பூசி சாதனையை சாடிய ப.சிதம்பரம்!

ஒன்றிய அரசு ஒரேநாளில் 2.5 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்திய சாதனையை ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

“தடுப்பூசி என்பது பிறந்தநாளில் கேக் வெட்டுவது போன்றதல்ல” : தடுப்பூசி சாதனையை சாடிய ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாடுமுழுவதும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தடுப்பூசி முகாம்களில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதைக் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நேற்று ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியானது. ஆனால், பிரதமரின் பிறந்தநாள் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? பிரதமரின் பிறந்த நாள் டிசம்பர் 31ம் தேதி என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஆண்டின் கடைசி நாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்குமா?

தடுப்பூசி என்பது பிறந்தநாளில் கேக் வெட்டுவது போன்றதல்ல. தடுப்பூசி ஒரு திட்டம். அது ஒரு செயல்முறை. இது ஒவ்வொரு நாளும் துரிதப்படுத்தப்பட வேண்டும். பிறந்தநாளில் உச்சத்தை அடையக்கூடாது.

உத்தர பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் கர்நாடகத்தில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியை விட அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பிறந்தநாளைத் தவிர மற்ற நாட்களில் செயல்படாத மாநிலங்களாகவே இவை இருந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளைத் தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories