இந்தியா

எழுத்தாளர் கே.செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது... திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்புக்கும் விருது!

திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கே.செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது... திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்புக்கும் விருது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எழுத்தாளர் இமையத்துக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் சாகிதிய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் டெல்லியில் இன்று வழங்கப்பட்டன.

தமிழில் எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ நாவலுக்கு கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது. பிரபல எழுத்தாளரும் முன்னாள் சாகித்ய அகாடமி தலைவருமான விஷ்வநாத் பிரசாத் திவாரி முன்னிலையில் சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர் காம்பர் எழுத்தாளர் இமையத்துக்கு விருதினை வழங்கினார். செயலாளர் சீனிவாசராவ் பாராட்டு தெரிவித்தார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை, செப்புப் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த கவிஞர் அருந்ததி சுப்ரமணியத்துக்கு When God is a Traveller என்ற ஆங்கில கவிதை நூலுக்கு விருது வழங்கப்பட்டது.

கன்னட மொழியில் பாகுபலி அகிம்சா திக்விஜயம் கவிதை நூலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லிக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 22 மொழிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

எழுத்தாளர் கே.செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது... திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்புக்கும் விருது!
Admin

மேலும், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த கே.செல்லப்பன்- அவர்களுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்த டி.இ.எஸ்.ராகவனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் சல்மாவின் இரண்டாது ஜாமங்களின் கதையை மராட்டியத்தில் மொழி பெயர்த்ததற்காக சோனாலி நாவாங்குளுகுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories