இலக்கியம்

எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய இலக்கியத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் மொழி வாரியாக வழங்கி வருகிறது இந்திய அரசு. இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருதுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதி 2018ம் ஆண்டு க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘செல்லாத பணம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. இவர் 1964ல் விருத்தாசலத்தில் பிறந்தவர். இவரது முதல் நூல், ‘கோவேறு கழுதைகள்’ எனும் நாவலாகும். தொடர்ந்து, ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்களை எழுதினார் இமையம்.

எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

திராவிட இயக்க எழுத்தாளரான இமையத்தின் எழுத்துலகம், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் அக உலகையும் பிரதிபலிக்கக்கூடியது. சாதிய அடக்குமுறைகள், பெண் ஒடுக்குமுறைகள் குறித்து புனைவுலகில் காத்திரமான பங்களிப்பை நிகழ்த்தி வருபவர் இமையம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் இமையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு வி.க. விருது, பெரியார் விருது, இயல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories