இந்தியா

“யூடியூப்லயே எனக்கு மாசம் ரூ.4 லட்சம் வருமானம் வருது” : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு!

யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பாதிப்பதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

“யூடியூப்லயே எனக்கு மாசம் ரூ.4 லட்சம் வருமானம் வருது” : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் யூடியூப் மோகம் அதிகமாகவே உள்ளது. இதில் வருமானம் கிடைப்பதால் பலரும் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டுவிட்டு தங்களுக்கென தனியாக யூடியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கூட அதிகமான இளைஞர்கள் நகைச்சுவை, அறிவியல், சமையல் என தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் யூடியூப் சேனல் தொடங்கி அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி, தனது யூடியூப் மூலம் தனக்கு மாதந்தோறும ரூ 4 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி, "கொரோனா பொது முடக்கக் காலத்தில் வீட்டிலிருந்தபோது இணைய வழியில் கருத்தரங்குகள் நடத்தினேன்.

இந்த கருத்தரங்கில் நான் பேசியதை, எனது யூடியூப் சேனலில் பகிர்ந்தேன். இந்த வீடியோக்களை அதிகமான பார்வையாளர்கள் பார்த்ததால் வருமானம் வரத்தொடங்கியது. இதையடுத்து மாதா மாதம் எனக்கு யூடியூம் மூலம் ரூ.4 லட்சம் வரை வருமானம் வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories