இந்தியா

இந்தியாவிலிருந்து நடையைக் கட்டும் ஃபோர்டு : வேலை பறிபோகும் அச்சத்தில் 25,000 ஊழியர்கள் - நடந்தது என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நடையைக் கட்டும் ஃபோர்டு : வேலை பறிபோகும் அச்சத்தில் 25,000 ஊழியர்கள் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் கடும் பொருளாதார சரிவை இந்தியா சந்தித்து வருகிறது. இதனிடையே மோடி ஆட்சியில், நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவிலிருந்து ஏற்கெனவே ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் இந்திய ஆட்டோ மொபைல் சந்தையை விட்டு வெளியேறிவிட்டன. இந்நிலையில், ஃபோர்டு நிறுவனமும் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான தகவலில், பொருளாதார சரிவால் ஃபோர்டு கார் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபிகோ, ஃப்ரீஸ்டைல் மற்றும் அஸ்பையர் உள்ளிட்ட மாடல்களின் உற்பத்தியை மட்டும் குறைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது 10% அளவில் தனது உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டோடு தமிழ்நாட்டில் செயல்படும் ஃபோர்டு கார் உற்பத்தி ஆலையை இந்தாண்டே மூடத் திட்டமிட்டுள்ளதாகவும், நிலுவையில் இருக்கும் வாகனங்களை மட்டும் சென்னை ஆலையில் பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து நடையைக் கட்டும் ஃபோர்டு : வேலை பறிபோகும் அச்சத்தில் 25,000 ஊழியர்கள் - நடந்தது என்ன?

மேலும் ஃபோர்டு நிறுவனத்திற்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விற்பனையும் பல மடங்கு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஆலையை மூடுவதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் ஃபோர்டு நிறுவனத்திற்கும் மிகப்பெரிய வரலாறு உண்டு. இந்த நிறுவனம் 1995ம் ஆண்டு சென்னை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் தடம் பதித்தது. அப்போது மகேந்திரா நிறுவனத்துடன் இணைந்து தனது உற்பத்தியை ஃபோர் நிறுவனம் துவக்கியது.

பின்னர் 1998ல் தனியாகவே செயல்பட ஆரம்பித்தது. சுமார் 2 மில்லியன் டார் மதிப்பீட்டில் சென்னை மறைமலைநகரில் ஆண்டுக்கு 1 முதல் 2 லட்சம் வரை வாகனங்களை உற்பத்தி செய்தது. ஃபோர்டு வந்த ஆதிக்கம் செலுத்தத் துவங்கியதை அடுத்து ஷோன்டை தனது உற்பத்தி மையத்தைத் தமிழ்நாட்டில் அமைத்தது.

இந்தியாவிலிருந்து நடையைக் கட்டும் ஃபோர்டு : வேலை பறிபோகும் அச்சத்தில் 25,000 ஊழியர்கள் - நடந்தது என்ன?

இதையடுத்து ஃபோர்டு நிறுவனம் இரண்டு லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் குஜராத்தில் தனது மற்றொரு ஆலையைத் துவக்கியது. இது வரை இந்த நிறுவனம் 12 கார் மாதிரிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐந்து மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதற்குக் காரணம் அதிகமான விலை என்று கூறப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளாகவே தொடர்ந்து இந்த நிறுவனம் நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளது. மேலும் கொரோனா காரணமாகக் கூடுதலான நஷ்டத்தைச் சந்தித்தது. இந்நிலையில் மகேந்திரா நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில்தான் இந்தியாவிலிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இந்த முடிவால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களின் குடும்பங்களும் மறைமுகமாகப் பாதிப்பைச் சந்திக்கப்போகிறது. இதனால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படப்போகிறார்கள்.

banner

Related Stories

Related Stories