இந்தியா

வளர்ப்பு நாயால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : கர்நாடகாவில் சோகம்!

நடைப்பயிற்சியின் போது வளர்ப்பு நாய் இழுத்துச் சென்றதால் ஏரியில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ப்பு நாயால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : கர்நாடகாவில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம், உலிகல் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஷ்மிதா. இவருக்கும் மஞ்சுநாத் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதையடுத்து கணவன் வீட்டிலிருந்த வளர்ப்பு நாயை நிஷ்மிதா காலையில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, ஏரிக்கரையோரம் நிஷ்மிதா நடந்து சென்றபோது திடீரென நாய், அவரைச் சங்கிலியுடன் தரதரவென இழுத்துக் கொண்டு ஓடியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவர் ஏரியில் விழுந்து மூழ்கியுள்ளார்.

பின்னர் நாய் மட்டும் தனியாக வீட்டிற்குச் சென்றுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நிஷ்மிதாவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பிறகு அடுத்த நாள் ஏரியில் நிஷ்மிதாவின் உடல் மிதப்பதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நாய் இழுத்துச் சென்றதில் ஏரியில் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories