இந்தியா

"காங்கிரசிலிருந்து வெளியேற பா.ஜ.கவினர் என்னிடம் டீல் பேசினர்" : கர்நாடக அரசியலில் குண்டு போட்ட எம்.எல்.ஏ!

காங்கிரசிலிருந்து வெளியேற பா.ஜ.க பணம் கொடுப்பதாக கூறியதாக கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"காங்கிரசிலிருந்து வெளியேற பா.ஜ.கவினர் என்னிடம் டீல் பேசினர்" : கர்நாடக அரசியலில் குண்டு போட்ட எம்.எல்.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா, ஜார்கண்ட் மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியே பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் பா.ஜ.க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பணத்தைக் கொடுத்து தன் பக்கம் இழுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக காக்வாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமந்த பாட்டில் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், காக்வாட் தாலுகாவுக்கு உட்பட்ட அய்னாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீமந்த பாட்டில் "2019ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேற பா.ஜ.க என்னிடம் பேரம் பேசியது. ஆனால் நான் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன். ஆட்சிக்கு வந்த பிறகு எனக்கு ஒரு நல்ல பதவி தரும்படி கேட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து பசவராஜ் பொம்மை முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து இவரது அமைச்சரவையில் ஸ்ரீமந்த பாட்டீலுக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டது.

"காங்கிரசிலிருந்து வெளியேற பா.ஜ.கவினர் என்னிடம் டீல் பேசினர்" : கர்நாடக அரசியலில் குண்டு போட்ட எம்.எல்.ஏ!

இதனால் ஸ்ரீமந்த பாட்டீல் அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில்தான் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது தனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாட்டீல் கடந்த 1999-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2004ம் ஆண்டில் அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது அவர் காங்கிரஸிருந்து வெளியேறி மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். ஆனால் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தார்.

பின்னர் 2018-ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்த ஆண்டே விலகினார். 2021ல் காக்வாட் இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories