இந்தியா

“யூனிஃபார்ம் இல்லைனா நிர்வாணமாக வாங்க” : மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தலைமையாசிரியர்- பெற்றோர்கள் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவிகளிடம் பள்ளி முதல்வர் ஆபாசமாகப் பேசியது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“யூனிஃபார்ம் இல்லைனா நிர்வாணமாக வாங்க” : மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தலைமையாசிரியர்- பெற்றோர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் முதல்வராக இருப்பவர் ராதேஷ்யாம் மாளவியா. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்துள்ளனர்.

இதைக் கவனித்த பள்ளி தலைமையாசிரியர் 'ஏன் சீருடை அணிந்து வரவில்லை' எனக் கேட்டுள்ளார். அப்போது அதற்கு மாணவிகள் எங்களின் சீருடை இன்னும் தைக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த பள்ளி தலைமையாசிரியர் மாணவிகளை ஆபாசமாகத் திட்டியுள்ளார். 'ஃபேஷனான உடை அணிந்து மாணவர்களைக் கெடுப்பதே நீங்கதான், பள்ளி சீருடை இல்லாவிட்டால் நிர்வாணமாக வாருங்கள்' என மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளார்.

இதுகுறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பிறகு பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் பள்ளி முதல்வரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையடுத்து போலிஸார் பள்ளி முதல்வர் ராதேஷ்யாம் மாளவியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories